சென்னை : இயக்கும் மற்றும் நடிகருமான வெங்கட் பிரபு சர்பட்டா படத்தை பார்த்து விட்டு பா. ரஞ்சித்தை வெகுவாக பாராட்டினார்.சர்ப்பட்டா பரம்பரை என்ன ஒரு மேஜிக்கான திரைப்படம், எனக்கு பெருமையாக இருக்கிறது.அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளனர் என்று படம் குறித்து புகழ்ந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
வித்தியாசமான கதை
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை கொடுக்கக்கூடியவர் பா ரஞ்சித். மெட்ராஸ் திரைப்படம் ஒரு சுவரை வைத்து நடக்கும் அரசியலை அப்பட்டமாக காட்டியது. அவரின் ஆளுமையை தனித்து புரிய வைத்தது.
அழகான கதை
சர்பேட்டா பரம்பரை படத்தை இயக்கு மீண்டும் தனது திறமையை நிரூபித்து இருக்கிறார் பா.ரஞ்சித், 1975ம் ஆண்டுகால கட்டத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளையும், கதாபாத்திரத்தின் தேர்வையும் மிகவும் அழகாக கையில் எடுத்து அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளார்.
கபிலாக ஆர்யா
ஆர்யா, துஷாரா, பசுபதி, ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ்பிரதாப், சபீர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இதில் கபிலன் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்துள்ளார் ஆர்யா. இந்த படத்திற்காக உடலை முறுக்கேற்றி மிகவும் கடுமையாக உழைத்துள்ளார். ஆர்யாவின் திரையுலக வாழ்வில் சிறந்த படங்களில் ஒன்றாக இப்படம் இருக்கும்.
குவியும் பாராட்டு
சர்பட்டா பரம்பரை படத்தை, இயக்குனர் சுசீந்திரன் வெகுவாக பாராட்டி இருந்தார். இதேபோல பலரும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் இயக்கும் மற்றும் நடிகருமான வெங்கட் பிரபு பா. ரஞ்சித்தை பாராட்டி தள்ளி உள்ளார்.
லவ் யூ ரஞ்சித்
அவரது, தனது ட்விட்டர் பக்கத்தில், லவ் யூ ரஞ்சித். என்ன ஒரு பிரமாதமான படம். என்ன ஒரு மேஜிக். எனக்கு பெருமையாக இருக்கிறது. ஆர்யா வேற லெவல். கலை உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் பின்னிவிட்டார். மிகவும் வலுவான தொழில்நுட்பக் குழு. நம் அனைவருக்கும் பெருமைமிக்கத் தருணம்” என்று பெருமையுடன் பாராட்டியுள்ளார்.