சென்னை லஸ் தேவாலயம் அருகில் உள்ள சாலையில் 80 வயதிற்கும் மேலான முத்தட்டி ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் உணவின்றி மிகவும் பறித்தவமான நிலையில் இருந்தார்.
மூதாட்டி
அந்த மூதாட்டிக்கு யாரும் இல்லை என்றும் அவருடைய மகனும் இறந்துவிட்டதாகவும் நான் வெகு காலமாக இங்கு தான் அமர்ந்திருக்கிறேன் யாராவது உணவு அளித்தால் உண்பேன் எனது வயது முதுமையால் கண்களும் சரியாக தெரியவில்லை இப்பொழுது எனக்கு பசிக்கிறது உணவு இருந்தால் கொடுக்குமாறு கேட்டார்
மனிதாவிமானம் இல்லாத திருடன்
இவர் இந்த நிலையில் இருக்க இதை பயன்படுத்திய திருடன் ஒருவன் இவருக்கு உதவுதாகவும் உணவளிப்பதாகவும் நான் பார்த்து கொள்கிறேன் என்ற ஆசை வார்த்தைகளை கூறி இரு தினங்களுக்கு முன்பு அவரை ஆட்டோவில் அழைத்து சென்று அந்த மூதாட்டி வைத்திருந்த கடைசி அவருடைய பொருள் மூக்குத்தி அதை எடுத்து கொண்டு அவரை ஏமாற்றி இருக்கிறான்.
யாரும் இல்லாத காவல் நிலையம்
இதை காவல் துறையினர் தெரிவித்து அவரை மீட்டு முதியவர் காப்பகத்தில் சேர்க்கலாம் என அப்பகுதியின் காவல் நிலையமான E1 மைலாப்பூர் காவல் நிலையத்துக்கு சென்றபொழுது அங்கு காவல் ஆய்வாளர் 5 நாட்கள் விடுமுறையாம் பொறுப்பில் இருக்கும் உதவி ஆய்வாளரும் காவல் நிலையத்தில் இல்லை சரி உதவி ஆணையரை சந்திக்கலாம் என நினைத்தால் அவரும் இன்னும் வரவில்லையாம் கடைசியாக துணை ஆணையரை சந்திக்கக்கலாம் என நினைத்தால் அவர் இரவு ரோந்து பணியில் இருந்ததால் இன்னும் வரவில்லை என்ற பதில் தான் கிடைத்தது