சென்னை: ஏன் இப்படி பண்றீங்க?.. என்னால முடியாது.. இதுதான் சரி என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முதல்முறையாக எதிர்ப்பு காட்டி வாக்குவாதம் செய்துள்ளார்.. என்ன நடந்தது? யாரிடம் வாக்குவாதம் நடந்தது?
அமமுகவில் இருந்து முக்கியமான நபர்கள் திமுக பக்கம் தாவிக் கொண்டிருக்கிறார்கள்.. குறிப்பாக, பழனியப்பன், ஜெயந்தி பத்மநாபன் போன்ற சீனியர்களே, வெறுத்துபோய் திமுக பக்கம் போய்விட்டார்கள்..
இதனால் அமமுக கூடாரம் அதிர்ந்து போனது.. அதிலும் பழனியப்பன் திமுக பக்கம் சென்றது, சசிகலாவுக்கே கோபத்தை ஏற்படுத்தியது.
கோபம்
இதையடுத்து, தினகரனுக்கு போனை போட்டு சத்தம் போட்டார்.. “எல்லாரையும் திமுக பக்கம் அனுப்பறதுக்குதான் நீ கட்சி நடத்துறியா” என்று கேள்வி எழுப்பினார். மற்றொருபக்கம், தினகரன் ஒதுங்கி அரசியல் செய்யாமல், தொண்டர்களை சந்தித்து அடிக்கடி பேச வேண்டும்… இல்லாவிட்டால் அமமுக என்ற கட்சியே நாளடைவில் காணாமல் போய்விடும் என்ற முணுமுணுப்புகளும் கட்சிக்குள் எழ ஆரம்பித்தன.
அதிருப்தி
இதற்கு பிறகு, திடீரென தொண்டர்களுக்கு கடிதம் எழுதினார் தினகரன்.. உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்று தெம்பூட்டி அந்த லெட்டரை எழுதியிருந்தார்.. ஆனாலும், தினகரன் – சசிகலா இடையேயான அதிருப்தி மேலும் அதிகமாகி உள்ளதாம்.. “விசுவாசிகள் எல்லோரும் உன்னோட நடவடிக்கைகள் பிடிக்காமல்தான் திமுகவில் இணைகிறார்கள்” என்று கோபம் காட்டிய நிலையிலும், தினரகன் தன் நிலைப்பாட்டை மாற்றி கொள்ளவே இல்லையாம்.
தினகரன்
அதனால் மறுபடியும் தினகரனிடம் பேசிய சசிகலா, “உன்னால கட்சி முடியாது.. பேசாமல் கட்சியை கலைத்து விடு” என்று எச்சரித்தாராம்.. அதற்கு தினகரன், அமமுக என்ற கட்சி இருப்பதால்தான் எடப்பாடிக்கு கொஞ்சமேனும் உங்களை பார்த்து பயமிருக்கிறது… கட்சியை கலைத்து விட்டால் அமமுகவினர் எல்லோரும் அதிமுகவுக்கு போனால் எடப்பாடிதான் வலிமையடைவார் என்று பதிலுக்கு வாக்குவாதம் செய்துள்ளார் தினகரன்.
கோபம்
அதற்கு சசிகலா, அமமுகவில் இருப்பவர்கள் எல்லாம் யார்? அதிகப்பட்சம் நம்ம சமூகம் தானே? நம்ம சமூகம் அதிமுகவுக்குள் இருந்தால் எடப்பாடி எடுக்கும் முடிவுகளை எதிர்ப்பார்கள்தானே? என்னை பற்றி எடப்பாடிக்கு எதிராக பேசுவார்கள்… நமக்காக அதிமுகவில் எடப்பாடியை எதிர்த்து பேச இப்போதைக்கு ஆட்கள் இல்லைங்கிறதினாலதானே எடப்பாடி நம் வழிக்கு வராமல் இருக்கிறார் என்கிற ரீதியில் அட்வைஸ் செய்திருக்கிறார் சசிகலா.
அசைன்மென்ட்
ஆனாலும், கட்சியை கலைக்க கடைசிவரை சம்மதிக்கவே இல்லையாம் தினகரன்.. அதுமட்டுமல்ல, அமமுகவில் அதிருப்தியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்ற லிஸ்ட்டை எடுக்க சொல்லி தன்னுடைய உதவியாளரிடம் அசைன்மென்ட் தந்திருக்கிறாராம்.. அந்த லிஸ்ட் கிடைத்ததும், அவக்ளை தொடர்புகொண்டு சமாதானம்படுத்தவும் அவர்களின் தற்போதைய தேவையை நிறைவேற்றவும் திட்டமிட்டுள்ளாராம் தினகரன்.. பார்ப்போம்..!