பெண்கள் தனியாக வெளியே நடமாடக் கூடாது என்ற தலிபான்களின் உத்தரவு மனித உரிமை ஆர்வலர்களை கொந்தளிக்க செய்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபான் அமைப்பினர் அங்கு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். 20 ஆண்டுகளுக்கு பின் அங்கு மீண்டும் ஆட்சியை நிறுவியிருப்பதுடன் இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையில் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றனர்.
குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ஆப்கனை கைப்பற்றிய போது, ‘நாங்கள் முன்பு போல கிடையாது, இனி அனைவரையும் உள்ளடக்கிய அரசாக இருப்போம் என தெரிவித்தனர்.’ ஆனால், அது பெயரளவிற்கே என்பதை நிரூபிப்பதை போல பெண்களுக்கு எதிராக பல்வேறு சர்ச்சை உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர்.