டெல்லி: விமானத்தில் பயணம் செய்ய பர்தா அணிந்து கொண்டு மனைவியின் பாஸ்போர்ட்டுடன் வந்த கொரோனா உறுதி செய்யப்பட்ட இந்தோனேஷியா நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.விமானத்தில் பயணம் செய்ய கொரோனா இல்லை என்ற சான்றிதழ் தேவைப்படுகிறது. இந்த நிலையில் இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து டெர்னேட் செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை விமான நிலையத்திற்கு ஒரு பெண் வந்திருந்தார்.
அப்போது பர்தா அணிந்திருந்த அவரின் பாஸ்போர்ட்டையும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழையும் என்பதை பார்த்த அதிகாரிகள் அவரை விமானத்தில் பயணம் செய்ய அனுமதித்தனர்.
![](https://www.thetruenews.in/wp-content/uploads/2021/07/citilink-072121getty1-1627034443.jpg)
பாதி வழியில்
இதையடுத்து விமானத்தில் பாதி வழியில் பாத்ரூமுக்கு சென்ற அந்த பெண் திடீரென பேன்ட் சர்ட் அணிந்து கொண்டு வெளியே வந்துள்ளார். இதையெல்லாம் அந்த விமானத்தின் ஊழியர் ஒருவர் பார்த்துவிட்டு போலீஸிடம் போன் செய்தார்.
![](https://www.thetruenews.in/wp-content/uploads/2021/07/citilink-0-1627034436.jpg)
விமானம்
அப்போது அவரிடம் போலீஸார் விசாரிக்கையில் விமானத்தில் பயணம் செய்வதற்காக மனைவியின் பாஸ்போர்ட்டுடன் பர்தா அணிந்து கொண்டு அவருடைய கொரோனா நெகட்டிவ் என்ற சான்றிதழுடன் வந்துள்ளார். இதையடுத்து அந்த நபருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் பாசிட்டிவ் என வந்தது.
![](https://www.thetruenews.in/wp-content/uploads/2021/07/119543918-gettyimages-11343659041-1627034429.jpg)
பிபிஇ கிட்
பின்னர் அவருக்கு மருத்துவ பாதுகாப்பு உடையை அணிய வைத்து அவரை வெளியே அழைத்து சென்ற போலீஸார் ஆம்புலன்ஸ் மூலம் அவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவிட்டனர். 14 நாட்கள் கழித்து அவரிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.
![](https://www.thetruenews.in/wp-content/uploads/2021/07/hnhorf7-citilink-plane-625x300-23-july-21-1627034417.jpg)
டெல்டா பிளஸ் வைரஸ்
உலக நாடுகள் கொரோனா வைரஸ், டெல்டா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தோனேஷியாவில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் விமானத்தில் பயணம் செய்ய கொரோனா இருப்பது தெரிந்தும் ஒரு நபர் ஏமாற்றியுள்ளார் என்றால் இவரது பின்புலத்தில் என்ன இருக்கிறது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.