Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

பிளஸ் 2 ரிசல்ட் ஆல்பாஸ் : 600க்கு 600 மார்க் யாருமில்லை – தசம ஸ்தானத்தில் மதிப்பெண்கள்

jpg

சென்னை: கொரோனா பரவல் காரணமாக பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று மதிப்பெண் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். 8 லட்சம் மாணவர்களுக்கான மதிப்பெண்கள் வெளியிடப்பட்ட நிலையில் முதன்முறையாக தசம ஸ்தானத்தில் வெளியிடப்பட்டன. மாணவர்களில் யாரும் 600க்கு 600 மதிப்பெண்கள் பெறவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பிப்ரவரி மாதத்தில் நடைபெற்றன. வழக்கமாக மார்ச் மாதத்தில் தேர்வுகள் நடத்தப்படும்

கொரோனா பரவல் காரணமாக அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. பிளஸ் 2வில் 100 சதவிகிதம் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. பள்ளிக்கு வராத எந்த தேர்வும் எழுதாத மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. மதிப்பெண்கள் பட்டியலை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலையில் வெளியிட்டார். அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் எந்த தேர்வுக்கும் வராத பள்ளிக்கே வராத 1656 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. 600க்கு 600 மதிப்பெண்கள் யாருமே பெறவில்லை. 30600 மாணவர்கள் 551 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

501 மதிப்பெண்கள் முதல் 550 மதிப்பெண்கள் வரைக்கு 1,67,133 மாணவர்கள் பெற்றுள்ளனர். 451 முதல் 500 வரைக்கும் 2,22,522 மாணவர்கள் வரைக்கும் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். 400 முதல் 450 வரை 2,08,015 மாணவர்கள் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதே போல 351 முதல் 400 வரைக்கும் 1,19,519 மாணவர்கள் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதன்முறையாக தசம ஸ்தானத்தில் மதிப்பெண்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp