சென்னை: மக்கள் நீதி மய்யத்திலிருந்து திமுகவில் இணைந்த டாக்டர் மகேந்திரனுக்கு திமுகவில் தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் துணைத் தலைவர் பதவியிலிருந்தவர் டாக்டர் மகேந்திரன். பொள்ளாச்சியைச் சேர்ந்தவர், கரைபடியாத கைகளுக்கு சொந்தக்காரர். தனது தொழிற்சாலைகள் மூலம் பலருக்கு வேலைவாய்ப்புகளை அளித்து வருபவர்.
இவர் மக்கள் நீதி மய்யம் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு லட்சக்கணக்கான ஓட்டுகளை அள்ளினார். அந்த தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டவர்களில் மகேந்திரனுக்கு கிடைத்த வாக்குகள்தான் அதிகம். அந்தளவுக்கு அவருக்கு கோவையில் செல்வாக்கு இருக்கிறது. இந்த நிலையில் அவர் சிங்காநல்லூர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றார். இவரது செல்வாக்கை பயன்படுத்தி கமல்ஹாசனும் கோவை தெற்கு பகுதியில் போட்டியிட்டார். கடைசி வரை வெல்வார் என இருந்த நிலையில் கடைசி ரவுண்டில் வானதி ஸ்ரீனிவாசன் ஆயிரத்து சொட்சம் வாக்குகளில் வென்றார்.

இதையடுத்து தேர்தல் தோல்வியிலிருந்து கமல்ஹாசன் பாடம் எடுத்து கொள்ள தயாராக இல்லை என்றும் தேர்தல் தோல்விக்கு வேட்பாளர்களே காரணம் என நியாயமற்ற பழியை சுமத்தியதாக அவர் அக்கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து அவர் கடந்த ஜூலை 8 ஆம் தேதி திமுகவில் இணைந்தார். அவரது செல்வாக்கையும் பெற்ற வாக்குகளையும் கருத்தில் கொண்டு அவருக்கு சில அசைன்மென்டுகள் ஒப்படைக்கப்பட்டன. இந்த நிலையில் அவருக்கு திமுகவில் புதிய பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் அவருக்கு திமுக தொழில்நுட் அணியின் இணை செயலாளராக மகேந்திரன் நியமிக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை கழகத்தின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார். ஏற்கெனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் இணைந்து அவர் பணியாற்றுவார் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.