Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

தனது ஆபிசில் ‘லாபம்’ என எழுதியதை தவிர.. தொகுதி மக்களுக்கு வானதி என்ன செய்தார்?. கமல் கடும் தாக்கு!

kamal2-1617862542-1627988014

கோவை: கோவை தொகுதியில் வானதி சீனிவாசனின் செயல்பாடுகள் எதுவும் இல்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் பாரதிய ஜனதா இரட்டை வேடம் போடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய கமல்ஹாசன் கூறியதாவது:-

மக்களுக்கு நன்றி

கோவை தெற்கு தொகுதி மக்கள் பணம் வாங்காமல் வாக்களித்து என்னை வெற்றியின் அருகில் அழைத்துச் சென்றனர். இதற்காக கோவை தெற்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா தொற்று காரணமாக மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் அதிக அளவில் உயிரிழந்துள்ளனர். கோவையில் உயிரிழந்த தொண்டர்களின் இல்லங்களுக்குச் சென்று வந்தேன் என்று கமல்ஹாசன் கூறினார்.

பாஜக இரட்டை வேடம்

கொங்கு நாடு குறித்த கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன், ‘ கிழக்கிந்தியக் கம்பெனியை போல வடக்கு இந்திய கம்பெனி உருவாகி இருக்கிறது. கொங்கு நாடு என்பது அரசியல் கோஷம். மக்களின் தேவை கிடையாது’ என்று கூறினார். மேலும் கமல்ஹாசன் கூறுகையில், ‘ இந்தியாவில் அதிக திரைப்படங்களில் இரட்டை வேடம் ஏற்ற எனக்கு இரட்டை வேடம் போடுபவர்களை நன்றாகத் தெரியும். மேகதாது விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது’ என்றார்.

ஒட்டுக்கேட்பு விவகாரம்

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பியபோது, ‘ எந்த அரசாங்கமும் தனிமனித வாழ்க்கையை கண்காணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். மகேந்திரன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் விலகி மாற்றுக் கட்சிகளில் இணைந்ததால் மக்கள் நீதி மய்யத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்று எழுப்பிய கேள்விக்கு ‘எந்தவித பாதிப்பும் இல்லை’ என்று கமல்ஹாசன் கூறினார்.

வானதி சீனிவாசன் செயல்பாடுகள்

கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசனின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன? என்று நிருபர்கள் கேட்டனர். ‘வானதி சீனிவாசன் தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ‘லாபம்’ என எழுதியது மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது. மற்ற எதுவும் எனக்கு தென் படவில்லை’ என்று கமல்ஹாசன் குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது.

உள்ளாட்சி தேர்தல்

இதன் காரணமாக நீண்ட நாட்களுக்கு பிறகு கமலஹாசன் வெளியே வந்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கியமான கட்சிகள் வெளியேறிய நிலையில் மக்கள் நீதி மய்யம் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp