Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

கொரோனா தடுப்பூசி போட்ட சான்றிதழை சோஷியல் மீடியாவில் போடாதீங்க.. அடையாறு டிசிபி சொல்வதை கேளுங்க

ROv_yN1s_400x400

சென்னை: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு அந்த சான்றிதழை சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்யும் மக்களுக்கு அடையாறு துணை போலீஸ் கமிஷனர் ஒரு அன்பு அறிவுரை வழங்கியுள்ளார். நீங்கள் சமீப காலமாகவே இதுபோன்ற நிறைய போஸ்ட்களை பார்த்திருக்க கூடும். “நான் தடுப்பூசி போட்டுவிட்டேன்.. அப்போ நீங்க..” என்பதை போல தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் தங்கள் சர்டிபிகேட்டை பேஸ்புக்கிலும், டுவிட்டரிலும், வாட்ஸ்அப் ஸ்டேடசிலும் வைத்திருப்பார்கள்.

பிறருக்கு இது ஊக்கம் தரும் என அவர்கள் நினைத்திருந்தாலும் வெறுமனே ஊசி போட்டதை சொன்னால் ஓகேதான். சான்றிதழை பதிவேற்றம் செய்வதுதான் சிக்கல்.

தடுப்பூசி சான்றிதழ்

கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டதுமே சான்றிதழ் வழங்கப்படும். அதில், உங்கள் பெயர், உங்கள் அடையாள அட்டையின் கடைசி நான்கு எண்கள், வேக்சின் பெயர் உள்ளிட்ட பல தனிப்பட்ட தகவல்கள் இடம் பெற்றிருக்கும். அதை பார்த்து, ஆன்லைன் மோசடி நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே இப்படிச் செய்யாதீர்கள் என்பது காவல்துறை கோரிக்கையாக உள்ளது.

டிசிபி அறிவுரை

இதுகுறித்து அடையாறு டிசிபி விக்ரமன், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவுரையில், கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்ட சான்றிதழ்களை சமூக வலைதளங்களில் பகிர்வதை தவிர்க்கவும். உங்களின் முழு பெயர், வயது, இருப்பிடம் மற்றும் அடையாள அட்டையின் சில தகவல்களை மோசடி நபர்களுக்கு நீங்களே கொடுப்பது போன்றது. இவ்வாறு தெரிவித்துல்ளார்.

தடுப்பூசி போடுங்க

எனவே, நீங்களும் இனிமேல், சர்ட்டிபிகேட்டை ஷேர் செய்யாதீர்கள். அதேநேரம், தடுப்பூசி செலுத்திய தகவலை கம்பீரமாக சொல்லவும் மறக்காதீர்கள் என்பதுதான், காவல்துறையின் கோரிக்கையாக இருக்கிறது.

நிதி மோசடிகள்

சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகள், எதிர்காலத்தில் தடுப்பூசி சான்றிதழ் இருந்தால்தான் தங்கள் நாட்டுக்குள் அந்த பயணிகளை அனுமதிக்கப்போகின்றன. எனவே, இந்த சான்றிதழ்களிலுள்ள தகவல்கள் பிறரால் காப்பியடிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதும் இதுபோன்ற எச்சரிக்கைக்கு ஒரு காரணம். இது தவிற நிதி சார்ந்த விஷயங்களிலும் உங்களுக்கு சிக்கல் ஏற்படுத்த இந்த விவரங்கள் உதவக் கூடும்.

தனியார் நிறுவனங்கள்

இதனிடையே ஜோமாட்டோ, உணவு வினியோகம் வழங்கும் நிறுவனம், தனது ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்றிதழை செயலியில் இணைத்துள்ளனர். இதை நெட்டிசன் ஒருவர் துணை போலீஸ் கமிஷனர் டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டி உள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ஜோமாட்டோ நிறுவனம், தற்போது தனது நிறுவன ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்களை பகிர்வதை குறைத்துக்கொண்டு இருப்பதாக உறுதி அளித்துள்ளது.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp