Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

கொரோனா தடுப்பூசி பணிகள்.. இந்த 3 விஷயங்கள் ரொம்ப முக்கியம்… சரியான பாதையில் செல்கிறதா இந்தியா

pti21-1623764705

டெல்லி: பொதுவாகவே தடுப்பூசி போடும் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள மூன்று விஷயங்கள் முக்கியம். அதை ஒரு நாடு எப்படி கையாள்கிறது என்பதைப் பொறுத்தே தடுப்பூசி போடும் பணியின் வெற்றி அமையும்.

கடந்த 2019இல் பரவ தொடங்கிய கொரோனா இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. உருமாறிய கொரோனா பல நாடுகளில் 2ஆம் அலையை ஏற்படுத்தியது.

தற்போதைய சூழ்நிலையில் கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசிகளே முக்கிய ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. ஒரு நாட்டிலுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது என்பது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

சவாலான விஷயம்

கொரோனா தடுப்பூசி என்று இல்லை. எந்த நோய்க்கும் தடுப்பூசி போடுவது என்பது சவாலான ஒரு விஷயம். முதலில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் மத்தியில் பெரும் தயக்கம் இருக்கும். அதன் பிறகு தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்படும். அப்படி நம்பிக்கை ஏற்பட்ட பின்னரே, தடுப்பூசி பணிகள் வேகமெடுக்கும். அப்போது போதியளவில் தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்க வேண்டும். அப்படி இருந்தாலும்கூட பொதுமக்களில் 80% பேர் தான் தடுப்பூசி எடுத்துக் கொள்வார்கள்.

மூன்று விஷயங்கள்

மீதமுள்ள 20% பேருக்குத் தடுப்பூசி செலுத்த மிக மீண்ட காலம் பிடிக்கும். உலகிலேயே தடுப்பூசி போடும் பணிகளை முதலில் தொடங்கிய நாடு பிரிட்டன். அங்கும் 80% பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவர்களுக்கு இரண்டாவது டோஸை செலுத்தும் பணிகளைப் பிரிட்டன் அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஒரு நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வெற்றிகரமாக நடைபெற மூன்று விஷயங்கள் முக்கியம்.

முதலில் தகவல்கள்

முதலில் தடுப்பூசி குறித்த தகவல்களை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும். தடுப்பூசிகள் பாதுகாப்பானது என்பதைப் புரிந்து கொள்ளும் சிலருக்கும் தடுப்பூசிகளை எங்கு, எப்போது எடுத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரியாமல் இருக்கலாம். அவர்களுக்கு அது குறித்த தகவல்களை எடுத்துச் செல்ல வேண்டும். அதேபோல தடுப்பூசிகள் குறித்த போலி செய்திகள் மக்களிடையே பரவுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

ஊக்குவித்தல்

அடுத்தாக தடுப்பூசி எடுத்துக் கொள்ள மக்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் மத்தியில் இருக்கும் தயக்கத்தைப் போக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும். சிலர் பொறுப்பற்ற முறையில் தடுப்பூசிகள் குறித்த போலி மற்றும் தவறான செய்திகளைப் பரப்புவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இந்த செய்திகள் மக்களிடையே அச்சத்தை உருவாக்கும். எனவே, இதையும் தடுக்க வேண்டும்.

தடுப்பூசி கையிருப்பு

மூன்றாவதாக, தடுப்பூசி இருப்பை உறுதி செய்ய வேண்டும். அதாவது அதிகப்படியான மக்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்வதில் ஆர்வாம் காட்டத் தொடங்கும்போது, அவர்களுக்குச் செலுத்த போதிய அளவில் தடுப்பூசிகள் இருக்க வேண்டும். அப்போது தான் தடுப்பூசி போடும் பணிகளில் எவ்வித இடர்பாடுகளும் ஏற்படாது. இந்த மூன்று விஷயங்களை கச்சிதமாகச் செய்வதாலேயே பிரிட்டன் நாட்டில் தடுப்பூசி பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தியா

இருப்பினும், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசி போடும் பணிகளில் பல சிக்கல் உள்ளன. குறிப்பாக இந்தியா போன்ற நாட்டில் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்துவதே பெரும்பாடு. அதை ஏற்படுத்திய பின்னரும், தடுப்பூசிக்கு நிலவும் பற்றாக்குறை என்பது மக்களைத் தடுப்பூசிகளிலிருந்து அந்நியப்படுத்தியே வைக்கிறது. தடுப்பூசிகள் மட்டுமே கொரோனாவை எதிர்கொள்ளக்கூடிய ஆயுதம் என்பதால் தடுப்பூசி போடும் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp