சென்னை : இயக்குனர் பிவாசுவின் இயக்கத்தில் உருவான வேலை கிடைச்சிடுச்சி திரைப்படத்தில் மூலம் தமிழில் அறிமுகமானவார் மன்சூர் அலிகான்.
இதையடுத்து, விஜயகாந்துடன் கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் முரட்டு வில்லனாக நடித்தார். இத்திரைப்படம் வெற்றி பெற்று நல்ல பெயரை இவருக்கு பெற்றுத்தந்தது.
மன்சூர் அலிகான் சமீபத்தில் கொரோனா குறித்து பேசி அது சர்ச்சையாகி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மீண்டும், கொரோனா குறித்து, இவர் பேசியது சர்ச்சையாகி உள்ளது.
விவேக் மரணம்
நகைச்சுவை நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கூறி பேட்டி அளித்திருந்தார். மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான் விவேக் உயிரிழந்ததாக கூறினார்.
கொரோனா 2வது அலை
கொரோனாவின் 2வது அலை மிகவும் தீவிரமாக இருந்த நேரத்தில், தடுப்பூசி ஒன்றே தீர்வாக பார்க்கப்பட்ட நேரத்தில், மன்சூர் அலிகானின் பேச்சு மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. தமிழக அரசு தடுப்பூசி போட்டுக்கொள்ளும் படி கூறிவந்த நிலையில், அவரின் பேச்சு தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரமாக மாறியது.
சர்ச்சையானது
இதையடுத்து, மஞ்சூர் அலிகான் மீது பல்வேறு தரப்பினரும் காவல் துறையில் புகார் கொடுத்தனர். இதையடுத்து, மன்சூர் அலிகான் உடனடியாக கைது செய்யப்பட்டார். இதனிடையே அவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின் வீடு திரும்பினார். இதையடுத்து, தடுப்பூசி குறித்து நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக கூறியிருந்தார்.
நேரில்வரவேண்டார்
இந்நிலையில், விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விஜயகாந்த் கட்சித் தொடங்கியது முதல், தனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக விஜயகாந்த் கொண்டாடி வருகிறார் . தற்போது , கொரோனா அச்சம் காரணமாக தொண்டர்கள் யாரும் நேரில் வர வேண்டாம் என தொண்டர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதல்வராகி இருப்பார்.
இந்நிலையில், விஜயகாந்தை இல்லத்தில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறிய மஞ்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது, நானும், லியாகத் அலிகானும் விஜயகாந்துடன் இருந்திருந்தால் இந்நேரம் அவர் முதல்வராக இருந்திருப்பார் என்று கூறினார். மேலும், பேசிய அவர், கொரோனானு ஒன்று இல்லைவே இல்லை, இதைவைத்து ஏமாற்றுகிறார்கள் என்று மீண்டும் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.