உடுப்பி: ரூ 2 கோடி மதிப்பிலான சித்தி விநாயகர் கோயிலை கர்நாடகா மாநிலம் உடுப்பில் கிறிஸ்துவ தொழிலதிபர் ஒருவர் கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடுப்பி மாவட்டம் சிருவா பகுதியைச் சேர்ந்தவர் கேப்ரியல் நாசரேத் (77). இவர் தொழிலதிபர். கேப்ரியலின் தந்தை பேபியன் செபாஸ்டியன் உயிரிழப்புதற்கு முன்னர் கேப்ரியலிடம் 15 சென்ட் நிலத்தை கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் உடல்நலக் குறைவால் செபாஸ்டியனும் அவரது மனைவி சபீனாவும் உயிரிழந்தனர். இதையடுத்து இவர்களது நினைவாக 15 சென்ட் நிலத்தில் ஒரு விநாயகர் கோயிலை கட்ட கேப்ரியல் முடிவு செய்தார்.
2 கோடி ரூபாய்
அதன்படி ரூ 2 கோடி செலவில் சித்தி விநாயகர் கோவிலையும் அதன் அருகே அர்ச்சகர் தங்குவதற்கான வீட்டையும் கேப்ரியல் கட்டி முடித்துள்ளார். அந்த கோயிலில் 36 அங்குலம் விநாயகர் சிலையை வைத்துள்ளார். இதையடுத்து இந்த கோயிலை பக்தர்களுக்கு அர்ப்பணித்துள்ளார்.
கோயில் நிர்வாகம்
இந்த கோயிலை கேப்ரியலின் நண்பர் சதீஷ், ரத்னாகர் ஆகியோர் நிர்வகித்து வருகிறார்கள். 15 சென்ட் நிலத்தில் விநாயகர் கோயிலை கட்டியது குறித்து கேப்ரியலிடம் கேட்ட போது அவர் கூறுகையில் கடந்த 1959 ஆம் ஆண்டு எஸ்எஸ்எல்சி முடித்தவுடன் நான் வேலைக்காக மும்பை சென்றேன்.
மும்பையில் வேலை
அங்கு மும்பையில் உள்ள பிரபாதேவி கோயிலுக்கு தினமும் சென்று வழிபடுவேன். அப்போதே எனக்கு எனது சொந்த செலவில் விநாயகர் கோயிலை கட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சிருவாவுக்கு வந்த நான் கோயில் கட்ட முடிவு செய்தேன்.
ஹேப்பி
பின்னர் அந்த கோயிலை இந்து நண்பர்களுக்கு அர்ப்பணித்துள்ளேன். இது எனக்கு உண்மையில் மகிழ்ச்சியை தருகிறது என்றார். மேலும் தனது வெற்றிக்கு பின்னால் சித்திவிநாயகர் இருப்பதாகவும் கேப்ரியல் நம்புகிறார். இந்த கோயிலை கட்ட இவர் ரூ 2 கோடி வரை செலவு செய்துள்ளார்.