சென்னை: தனது முன்னாள் காதலர் தன்னை ஆசிட் வீசி கொலை செய்ய முயன்றதாக பிக்பாஸ் பிரபலம் கூறியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
பிரபல போஜ்பூரி நடிகை அக்ஷரா சிங். 2010 ஆம் ஆண்டு வெளியான சத்யமேவ் ஜெயதே என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ள அக்ஷரா சிங், பல விருதுகளையும் குவித்துள்ளார்.
அக்ஷரா சிங் தபதலா, சர்கார் ராஜ், சத்யா ஆகிய படங்களில் அவரது நடிப்பில் பெரும் ஹிட்டானது. போஜ்பூரி சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வருகிறார் அக்ஷரா சிங். 2015ஆம் ஆண்டு ஜீ தொலைக்காட்சியில் வெளியான காலா டீக்கா என்ற டிவி சீரியலின் மூலம் இந்தியில் அறிமுகமானார்.
பிக்பாஸ் ஓடிடியில் பங்கேற்ற அக்ஷரா : இதேபோல் சோனி டிவியிலும் சீரியல்களில் நடித்துள்ளார் அக்ஷரா சிங். இந்நிலையில் தற்போது இந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஓடிடியில் பங்கேற்றார் நடிகை அக்ஷரா சிங். இந்த நிகழ்ச்சியில் இருந்து 29 ஆம் நாள் வெளியயேற்றப்பட்டார். இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார் அக்ஷரா சிங்.
காதல் பிரேக்கப் ஆன பிறகு இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அக்ஷரா சிங், தனது முன்னாள் காதலர் குறித்து திடுக்கிடும் தகவலை கூறி பதற வைத்துள்ளார். அதாவது அவர்கள் இருவரும் பிரிந்ததைத் தொடர்ந்து, அவருடைய உயிருக்கு மற்றும் வாழ்க்கைக்கு அச்சுறுத்தல்களைப் பெற ஆரம்பித்ததாக தெரிவித்துள்ளார்.
முகத்தில் ஆசிட் உற்ற ஆள் அனுப்பினார் மேலும் கைகளில் ஆசிட் வைத்திருந்த சில ஆண்கள் அவரை குரூப்பாக துரத்தியபோது அது ஒரு முடிவுக்கு வந்தது என்றும் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய முன்னாள் காதலரான அந்த நபர் தன்னை கொன்றுவிடுவார் அல்லது தனது சினிமா தொழிலை அழித்து விடுவார் என்று தனக்கு பல மிரட்டல்கள் வந்தன என்றும் கூறியுள்ளார் நடிகை அக்ஷரா சிங்
. கேரியரையே காலி செய்ய முயற்சி ஆனால் தன் தந்தையின் உரையாடலுக்கு பிறகு தான் மிகவும் வலிமை அடைந்ததாகவும் தான் அவற்றை கவனிப்பதை நிறுத்திவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் தான் தனது உயிருக்கு கூட பயப்படவில்லை என்றும் தான் பல விஷயங்களை எதிர்கொண்டதாகவும் கூறியுள்ளார். பின்னர் மீண்டும் சில சிறுவர்களின் கையில் ஆசிட் பாட்டீலை கொடுத்து தன் கேரியரையே காலி செய்ய தனது முன்னாள் காதலர் அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
எந்த பெண்ணும் அனுபவிக்கக் கூடாது தன் வாழ்க்கையில் தான் அனுபவித்ததை எந்தப் பெண்ணும் அனுபவிக்கக் கூடாது என்று கடவுளிடம் பிரார்த்திக்கிறேன், என்றும் அக்ஷரா சிங் கூறினார். மேலும் மனச்சோர்வை எதிர்த்து தான் போராடியதையும் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார் அக்ஷரா சிங். நடிகை அக்ஷரா சிங் தனது முன்னாள் காதலர் குறித்து தெரிவித்துள்ள இந்த பகீர் புகார் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.