சிதம்பரம்: சிதம்பரம் சென்று இருக்கும் ஆளுநர் ஆர். என் ரவி அங்கு கோவில் விதிகளை மீறி செயலபட்டதாக புகார் எழுந்துள்ளது.
மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்துக்கு இன்று ஆளுநர் ரவி சென்றுள்ளார். தெலங்கானாவில் நடைபெற உள்ள புஷ்கர விழாவுக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து விழா எடுக்கப்படும்
ஆளுநர் ரவி மயிலாடுதுறை இதற்காக ஆளுநர் ரவி மயிலாடுதுறை சென்றார். இந்த நிலையில் இந்த விழாவிற்கு ஆளுநர் ரவியை அழைக்க கூடாது என்று திக, திவிக, விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். அதோடு மயிலாடுதுறையில் ஆளுநருக்கு எதிராக கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர் . ஆளுநர் ரவி வருகையை எதிர்த்து திக, திவிக, விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். நேற்றே ஆளுநர் இந்த விழாவிற்காக சிதம்பரம் வந்துவிட்டார்.
சிதம்பரம் சிதம்பரம் அவர் நேற்று காலை சிதம்பரம் நடராஜர் கோவிலில் தஹனது மனைவியோடு சேர்ந்து வழிபாடு நடத்தினார். இந்த நிலையில் ஆளுநருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டு அங்கு வழிபாடு நடத்தப்பட்டது. அவருக்கு கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கோவிலில் சில நிமிடங்கள் வழிபாடு செய்தவர் அங்கு இருந்த சாமி சிலைகளை பார்த்தார். கோவிலின் வரலாறு பற்றி ஆளுநர் ரவியிடம் விளக்கப்பட்டது.
என்ன நடந்தது இந்த நிலையில் கோவில் வளாகத்திற்குள் ஒரு இடத்தில் ஆளுநர் ரவி தனது மனைவியுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதில் கோவில் பூசாரிகள், ஊழியர்கள் இடம்பெற்று இருந்தனர். இந்த புகைப்படம்தான் சர்ச்சையாகி உள்ளது. அதில் புகைப்படத்திற்கு பின்னே இருக்கும் போர்ட் ஒன்றில் இங்கே புகைப்படம் எடுக்க கூடாது என்று போட்டுள்ளது. சரியாக அதற்கு முன் நின்று ஆளுநர் புகைப்படம் எடுத்ததுதான் சர்ச்சையாகி உள்ளது.
கோவில் பொதுவாக கோவில்களில் சில இடங்களில் போட்டோ எடுக்க தடை விதிக்கப்படும். இதை மீறி போட்டோ எடுத்தால் அபராதம் விதிக்கப்படும். அதேபோல் நடவடிக்கையும் எடுக்கப்படும். ஆனால் ஆளுநர் சரியாக போட்டோ எடுக்க கூடாது என்று சொல்லப்பட்ட இடத்தில் இருந்து புகைப்படம் எடுத்ததுதான் சர்ச்சையாகி உள்ளது. சரியாக அங்கே நின்று ஏன் போட்டோ எடுத்தார் என்று சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
விளக்கம் என்ன? அதேபோல் ஆளுநர் உள்ளே வரும் போதும் அவரை கேமரா மேன்கள் சூழ்ந்து பல இடங்களில் புகைப்படங்கள் எடுத்தனர். இதுவும் இணையத்தில் வைரலாகி உள்ளது. பொதுவாக இது போன்று பெரிய தலைவர்கள் கோவிலுக்கு வரும் போது அவர்கள் கோவிலுக்குள் புகைப்படம் எடுப்பது வழக்கம்தான். இதில் விதி மீறல் இல்லை என்று அதிகாரிகள் வட்டாரத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.